Connect with us
 

News

நம் வார்த்தையை நம்பி பணம் போடுபவர்களுக்கு நாம் திருப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும் – வெற்றி மாறன் !

Published

on

ஒரு படம் பண்னும்போது அந்தப்படத்தோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது.இந்தப்படத்தில் சமூகநீதிக்கான ஒரு உரையாடல் இருந்தது.

அதேநேரம் இந்தப்படத்தை மெயின்ஸ்ட்ரீம் படமாக பண்ணவும் செய்தோம். இந்தமாதிரியான விருது படத்தில் உழைத்தவர்களுக்கு ஒரு உற்சாகம் தரக்கூடியது. மீடியா இந்தப்படத்தை கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு படம் நல்லா வரும்னா அது தன்னைத் தானே சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

இந்தப்படத்தில் எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. குடும்பம் மனைவி அக்கா,அப்பா, குழந்தைகள், மற்றும் என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. என் உதவி இயக்குநர்கள் மிகுந்த மனபலம் வாய்ந்தவர்கள். என் எமோஷ்னல் கோபத்தை எல்லாம் தாங்கிக்கொள்வார்கள். என் கேமராமேன் வேல்ராஜ் சார் ரொம்ப நேர்த்தியாக செய்திருந்தார்.

ஜீவி பிரகாஷ் பேக்ரவுண்ட் சாங்ஸ் ரொம்ப ஸ்பெசலா இருந்தது. ஜாக்சன் நான் தயாரிப்பாளரிடம் போடுற சண்டையை அவர் போட்டுவிடுவார். அவருக்கும் நன்றி. ராமர் மேடைக்கு வந்தாலே பயம்.. எடிட்டிங் வேலையை அவர் எனக்காக காத்திருந்து காத்திருந்து செய்தார். அவருக்கு நன்றி. எனக்கு கிடைக்கும் நடிகர்கள் எல்லாருமே எனக்கு கிடைத்த கிப்ட். கென் தான் இந்தக்கதைக்கு முதல் தொடக்கம்.

சிவசாமிக்காக கூட ரெண்டு மூனு பேரிடம் போய்..அதன்பின் தான் தனுஷ் வந்தார். கென்னை தனுஷ் நன்றாக ஊக்கப்படுத்தினார். மஞ்சுவாரியார் நடிப்பு தான் இந்தப்படத்தை குடும்பத்திற்காக படமாக மாற்றினார். தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும் அவர் யார் மகன் கேரக்டர் என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது.

தாணு சார் இந்த கதையை நாலுபக்கம் படித்துவிட்டு ஓ.கே பண்ணுவோம் என்றார். ரொம்ப ஸ்ட்ரெஸ்புல் வொர்க்காக இருந்தது. குறிப்பாக டப்பிங்கில் எல்லாம் என்னால் முழுதாக இருக்க முடியவில்லை. நம் வார்த்தையை நம்பி பணம் போடுபவர்களுக்கு நாம் திருப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். அதை நாம் கவனமாக கையாண்டு வந்தேன். தாணு சார் இந்தப்படத்திற்கு கிடைத்தது தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு போனதற்கு கிடைத்தது” என்றார் .