News
அசுரன் படத்தால் புலம்பி தள்ளும் விநியோகிஸ்தர்கள்
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது மட்டும் அல்ல வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை குவித்து வருகிறது.
ஆனால் இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் வியாபார பேச்சுவார்த்தை போது தயாரிப்பாளர் தாணு கூறிய விலையை விநியோகிஸ்தர்கள் வாங்க ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் கடந்த இரண்டு வருடங்களால தனுஷ் படம் சரியாக போகாததுதான் இதற்கு காரணம் இதற்காகதான் விநியோகிஸ்தர்கள் தாணு சொன்ன விலைக்கு இந்த படத்தை வாங்க தயங்கினர்.
அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த படத்தில் மேல் வைத்த நம்பிக்கையில் சொந்தமாக இந்த படத்தை ரிலீஸ் செய்தார். தற்போது இந்த படம் வசூல் மழை பொழிந்து வருகிறது இதனால் இப்பிடியொரு நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோம் என்று விநியோகிஸ்தர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமாராக 30 கோடி ரூபாய் ஷார் கொடுத்துள்ளது தயாரிப்பாளருக்கு இதைத்தவிர சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒட்டுமொத்த லாபமும் தயாரிப்பாளர் ஒருவருக்கே செல்கிறது என்றும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.