News
ஸ்பெயின் நாட்டில் பரபரப்பான படப்பிடிப்பில் அஜித்தின் வலிமை !
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் வலிமை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருடன் ஹீமா குரேஷி, கார்த்திகேயன், ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்பட பலர் நடிக்கின்றனர்.
மும்முரமாக நடந்து வரும் இப்படத்தின் இறுத்திக்கட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் படக்குழுவினர் அஜித்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்பெயின் நாடு செல்ல உள்ளனர். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு இடம் பெறும் சண்டைக்காட்சிகளை ஸ்பெதின் நாட்டில்தான் படமாக்கப்பட வேண்டும் என்பதில் இயக்குனர் எச்.வினோத் உறுதியாகயிருக்கிறார்.
வலிமை படத்தின் பர்ட்ஸ் லுக் அஜித் அவர்களின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது இது அஜித் அவர்களின் 50-வது பிறந்தநாளாகும்.