News
அஞ்சாதே-2 படத்தில் அருண் விஜய்யுடன் மிஷ்கின் கூட்டணியா?

தமிழ் சினிமாவில் குறைந்த செலவுகளில் படம் தயாரித்து தயாரிபாளர்களுக்கு வெற்றியை கொடுக்கும் இரு சில இயக்குநர்களில் மிஷ்கின் அவர்களும் ஒருவர். குறைவான பட்ஜெட் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு மன நிறைவை கொடுக்கும் ஒரு அற்புதமான இயக்குநர் மிஷ்கின் அவர்கள்.
இவர் இறுதியாக உதயநிதியை வைத்து இயக்கிய ‘சைக்கோ’ படம் வெளியாக மெஹா ஹிட் அடித்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் மிஷ்கின் சுமார் 11 கதைகளை தயாராக வைத்துள்ளாராம்.
அதில் ஒரு கதைதான் 2008 வெளியான ‘அஞ்சாதே’ அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயார் செய்யுள்ளார். அஞ்சாதே படத்தில் நடிகர் நரேன் அவர்கள் நடித்திருப்பார் தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் அந்த அளவிற்க்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் அந்த கதாப்பாதிரத்தில் நடிக்க அருண் மிக சரியாக இருக்கும். மிடுக்கான உடல் அமைப்பு போலீஸ் அதிகாரிக்கு மிக கணுகச்சிதமாக பொருந்துவார்.
ஆனால் இதற்க்கு முன்னர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சிம்புவிற்க்கு தொடர்ந்து பல படங்கள் வரிசையில் இருப்பதால் அந்த இடைவெளியில் அருண் விஜய் அவர்களை வைத்து அஞ்சாதே-2 படத்தை இயக்க முடிவு செய்து களத்தில் இறங்கி உள்ளார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக ‘கைதி’மற்றும் மாஸ்டர் பட வில்லன் அஞ்சாதே 2 படத்தில் முதல்முறையாக அர்ஜுன் தாஸ் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பறிவாளன் பிரச்சனைக்கு பின்னர் மிஷ்கின் அவர்களுக்கு பல இடங்களில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதானே அதுவும் மிஷ்கின் போன்று நல்ல மனிதர்களுக்கு சொல்லவா வேண்டும்.