Connect with us
 

News

அடுத்த மாதம் வெளியாக தயாராகும் என்.ஜி.கே

Published

on

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு எந்த படமும் வெளியாகவில்லை தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் சூர்யா. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் நடிக்கிறார்கள் இந்த படத்தில் சூர்யா ஒரு அரசியல் வாதியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாக மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது என்.ஜி.கே படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. நேற்று முதல் சூர்யா டப்பிங் கொடுத்து வருகிறார். விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. எனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் என்ஜிகே திரைக்கு வரும்.