News
அன்பான ரசிகர்களின் கையெழுத்தோடு விண்ணில் பறந்த பலூன் !

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ‘சூரரை போற்று’ இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இப்படம் இன்று இரவு அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடிபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்ளின் கையெழுத்தை அனுப்புமாறு சூர்யா வீடியோ ஒன்றின் மூளம் கோரிக்கை விடுத்தார் இதனையடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் சூர்யாவுக்கு தங்களுடைய ஆட்டோகிராப்பை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இந்த கையெழுத்துக்கள் அனைத்தையும் ஒரு மிகப்பெரிய பிரமாண்ட பலூனின் ஒட்டி அந்த பலூனை விண்ணுக்கு அனுப்பிய ஒரு வீடியோ பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிப்பின் நாயகன் சூர்யா.
இன்று இரவு வெளியாகயுள்ளா சூரரை போற்று திரைப்படம் அவரின் அடுத்த படத்திற்க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புதிய சப்ஸ்கிரைபர்கள் அமேசான் பிரைமுக்கு இந்த ஒரே ஒரு படத்தால் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஓடிடி வரலாற்றில் மிக அதிக வசூல் செய்யும் திரைப்படமாக சூரரைப்போற்று படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயமாக இப்படம் சூர்யாவின் சினிமா பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புனை படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.