News
அயலான் படத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் மறுப்பா?
‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’
இதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏலியனுடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்று இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் படப்பிடிற்க்கு இப்படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங் வர மறுப்பதாகவும் அதனால்தான் இப்படத்தின் படப்பிடிப்பு லாக் டவுனுக்கு முன்னதாகவே தடை பட்டதாகவும் இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் இருந்து மாற்றப்படலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்செய்தியை முற்றிலும் மறுத்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தனது சமூக வலைத்தளத்தில் யார் எப்போது படப்பிடிப்பை தொடங்குகிறார்கள் என சொல்லுங்கள். நான் வேலை செய்வதற்க்கு ஆர்வமாக இருக்கிறேன் என பதில் கொடுத்தார்.
இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங் ஆதரவாக ‘அயலான்’ பட இயக்குநர் ரவிகுமார் தனது டுவிட்டர் பதிவில் நான் பார்த்ததில் ரகுல் ப்ரீத் சிங் மிகவும் ஒழுக்கமான நடிகை அதனால் யாரும் தவறான செய்தியை நம்ம வேண்டாம் எங்கள் குழு அவருடன் படப்பிடிப்பை தொடங்கி வேலை செய்ய மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. அனைத்தும் இயழ்பு நிலைக்கு வந்ததும் படப்பிடிப்பை நடத்தி முடிப்போம் என்று பதிவிட்டார்.