News
அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அதர்வா பட நாயகி !

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம்தாம் ‘சூரரை போற்று’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரீலீஸுக்கு தயாரான நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு நாடுமுழுவதும் பிறப்பிக்க பட்டதால் படத்தின் வெளியீடு தாமதமாகிவிட்டது. இக்காரணத்தால் இப்படம் தீபாவளி திருநாளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹரி – சூர்யா மீண்டும் இணையும் படமான ‘அருவா’ இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.
தற்போது இந்த படத்தின் நாயகி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இமைக்கா நொடிகள் மற்றும்,அயோக்கியா படத்தின் நாயகி ராஷி கண்ணா ‘அருவா’படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.சூர்யாவுடன் ‘அருவா’ படத்தில் நடிக்கவிருப்பதை நடிகை ராஷிகண்ணா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதால் ராஷிகண்ணாவுடன் இன்னொரு பிரபல நடிகையும் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.