News
நடிகை ஆண்ட்ரியாவுக்கும் கொரோனா தொற்று !

தமிழ் சினிமாவில் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா. ஒரு நடிகை என்பதை தாண்டி இவர் சிறந்த பாடகி வட சென்னை, தரமணி போன்ற படங்களில் தனது சிறப்பான நட்ப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆண்ட்ரியாவுக்கு தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் என் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று கூறிதுள்ளார்.