Connect with us
 

News

இணையத்தை கலக்கும் தர்பார் ஃபர்ஸ்ட்லுக்

Published

on

சர்கார் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் ஏ.ஆர் முருகதாஸ் – பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் இணையும் படத்தின் முதல் லுக் போஸ்டர் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகி வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது.

இந்த படத்திற்க்கு #தர்பார் என்று பெயர் சூட்டி உள்ளது படக்குழு, இந்த படத்தின் பெயருக்கும் நம்ம தலைவரின் தோற்றதுக்கும் கணு கச்சிதமாக பொருந்தியுள்ளது. படத்தின் பெயருக்கு ஏற்ற போல படமும் தர்பார் போல அடிதடி என மாஸ் போல ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்குவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் சற்று இளமை தோற்றத்துடன் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார். மேலும் ரஜினியை சுற்றி வர படு பயங்கரமான ஆயுதங்கள் சிதறுவது போல உள்ளது. இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்று தெளிவாக தெரிகிறது நமக்கு. அதுபோல ரஜினி இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி என்று மிக தெளிவாக தெரிகிறது.

நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் எஸ்,ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது இது உண்மை என்று நம்மதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பேட்ட படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் தொடங்கவுள்ளது.