Connect with us
 

News

இணையத்தை கலக்கும் தளபதி விஜய்யின் குட்டி கதை !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன்,ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குட்டி கதை பாடல் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியானது. அனிருத் இசையில் , அருண் ராஜா காமராஜ் வரிகளில், தளபதி விஜய் அவர்கள் இப் பாடலை பாடியுள்ளார்.

ஒரு குட்டி கதை பாடல் யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.5 நிமிடத்தில் 1 லட்சதிற்கும் அதிகமான லைக்ஸ். தற்போது 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் இந்தப் பாடல் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

24 மணிநேரத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் . இதை #kutty story என்ற ஹாஸ் டேக் பதிவிட்டு தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

By : Saranya