Connect with us
 

News

இந்தியன் 2 படப்பிடிப்பில் கோரவிபத்து !

Published

on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இரவில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கு எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து பெரிய விபத்து நடந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஷங்கரின் உதவி இயக்குனர் மற்றும் உதவியாளர் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் இயக்குனர் ஷங்கரும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By : Saranya