Connect with us
 

News

இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ‘சூரரை போற்று’ இசை வெளியீடு !

Published

on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரை போற்று.2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து உள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி , ஜாக்கி ஷெராப், மோகன் பாபு, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யா மாறா என்னும் கதாபாத்திரத்தில் நடிதுள்ளார்.

இப்படத்தின் இசை வெலிய்யிட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இன்று நடைபெற்றது. இதுவரை விமானத்தில் பறக்காத 100 குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் முன்னிலையில் இசை வெளியீடு நடைபெற்றது.

விமான சீட்டில் , சூர்யாவின் சூரரை போற்று புகைப்படங்கள் ஒட்டப்பட்டு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழா தமிழ் சினிமாவை மட்டும் அல்ல இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.

சூரரை போற்று இசை வெளியீட்டு விழாவில் சிவகுமார், சுதா கொங்கரா , ஜி. வி பிரகாஷ் குமார்.மோகன் பாபு, விவேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோட் சூட்டில் ஆடியோ லாஞ்சுக்கு வந்துள்ள சூர்யாவின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வீடியோ “வெய்யோன் சில்லி” பாடல் ரிலீஸ் ஆனது. ஜி. வி பிரகாஷ் குமார் இசை அமைத்து இருக்கிறார். பாடலை விவேக் எழுதியுள்ளார்.

ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கிறார்.இந்தப் பாடல் ரொமான்டிக்காக இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பாடாலின் வரிகளுக்கு அர்த்தத்தையும் வெளியிட்டார் விவேக்.

பிரம்மாண்டமாக வரைந்து இருந்த சூரரை போற்று படத்தின் போஸ்டர் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது . இதில் சூர்யா கோபமான முகத்துடன் இருப்பது போல், பின்னாடி ஊர்குருவியின் புகைப்படம் இருக்கிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியது , எனது வாழ்க்கையில் மிக சிறந்த படமாக அமைந்தது சூரரை போற்று. இந்தப் படத்தில் மோகன் பாபு காட் ஃபாதர் போல நடித்து இருக்கிறார். அவருடன் இருக்கும் எல்லா சீன்களும் படத்தின் ஹைலைட். இந்த விமானத்தில் இருக்கும் போட்டோவில் இருப்பது சூர்யா இல்லை. இந்தியாவில் கொண்டாடப்படாத பல ஹீரோக்கள் தான். இந்தப் படம் சுதாகொங்கராவின் 10 வருட கனவு எனவும் அவர் கூறினார்.சூரரை போற்று படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

By : சரண்யா