Connect with us
 

News

இன்னும் 11 நாட்கள் மட்டுமே மாஸ்டர் படத்திற்க்கு உள்ளது !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர் இதில் விஜய் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்கள். இவர்களுடன் மாளவிகா மோஹனன் , சாந்தனு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

யூத் ஐ கான் ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி,கர்நாடகா சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 9 தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் பர்ட்ஸ் லுக் மற்றும் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பின்னர் வெளியான ‘குட்டி கதை’ என்ற பாடல் விஜய் குரலில் வெளியாகி அமோக வரவெற்பு கிடைத்தது.

விஜய் ரசிகர்களை மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த இந்த பாடல் தற்போது வரைக்கும் சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி விஜய் ரசிகர்கள் எதிர் பார்த்தது போலவே மாஸ்டர் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைய இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது என்ற தகவல் படக்குழுவிடம் இருந்து கிடைத்துள்ளது.