Connect with us
 

News

இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை

Published

on

2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய திறன் கொண்ட கதையாகும்.

இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும் சாத்தியமும் நிறைந்து இருந்தது. அது போலவே சமீபத்தில் ‘கோலி சோடா 2’ படத்தின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அறிவித்த நாளிலிருந்தே படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்துவருகிறது . இக்கதை நான்கு முதன்மை கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார்.

இப்பொழுது அந்த நான்கு கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , ”இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

கோலி சோடாவின் முதல் பாகத்தில் வந்து கலக்கிய ATM கதாபாத்திரத்தை போன்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சமுத்திரக்கனியினுடையது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம் இது. அவரது தோற்றம் வித்தியாசமாகவும் பேசப்படும் விஷயமாகவும் இருக்கும்.

இதை தவிர மேலும் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. படப்பிடிப்பு மிகவும் திருப்திகரமாக நடந்துகொண்டிருக்கின்றது ”. இப்படத்தை விஜய் மில்டனின் ‘Rough Note’ நிறுவனம் தயாரிக்கின்றது. ‘கோலி சோடா 2’ வில் திறமையான பல நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

Continue Reading