News
இரத்ததானம் செய்த ரஜினி ரசிகர்கள்
வேலூர் மாவட்டத்தில், தலைவரின் சொந்தங்கள் வாட்ஸப் குழு சார்பாக தலைவரின் 68வது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் இக்குழுவின் அட்மின்கள் ஜி.பி.
சரவணன், ரஜினி வெறியன் கார்த்தி, சூரிய கருப்பையா ஆகியோர் தலைமையில் பொது இலவச மருத்துவ பரிசோதனைகளும், இரத்த தான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சோளிங்கர் என்.இரவி அவர்களும், மாவட்ட செயலாளர் நீதி (எ) அருணாச்சலம் அவர்களும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர், இதில் எலும்பு பரிசோதனை நிகழ்ச்சியில் 500 பேர் உடல் முழுவதுமான பரிசோதனைகளையும், சிகிச்சைகளும் செய்து கொண்டனர், இரத்த அழுத்த பரிசோதனைகளும், சர்க்கரை நோய் பரிசோதனைகளும் செய்து கொண்டு அதற்கான மருந்துகளையும் பெற்றுக்கொண்டனர், இதில் தலைவரின் வாட்ஸப் குழுவினர் 68 பேர் இரத்த தானம் வழங்கினார்கள்