News
இவரா வலிமை பட நாயகி அதிர்ச்சி அடையும் அஜித் ரசிகர்கள்

இயக்குனர் H.வினோத் இயக்கதில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடிந்த நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரதில் ஆரம்பமாகிறது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கூட நாயகி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறது படக்குழு காரணம் படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லையாம் படக்குழு.
குறிப்பாக இந்த படம் அஜித்தை மட்டுமே சுற்றி கதைக்களம் நகரும் என்பதால் படதில் நாயகிக்கு பெரிதாக வேலை எதுவும் இருக்காது இந்த காரணம்தான் நாயகியை யார் என்று சொல்லாமல் தேர்வு செய்யாமல் படக்குழு இருக்க காரணம்.
ஆனாலும் நாயகியாக நடிக்க நடிக்க யாமி கவுதம், இலியானா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் நாயகி யார் என்பதை அறிவித்து விடுவோம் என்கிறது படக்குழு. அதிலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்குதான் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் படங்களில் நடித்தபோது அஜித் ரசிகர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். இந்த நிலையில் அவரே வலிமையின் நாயகியாக அறிவிக்கப்பட்டால் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.