News
ஈஸ்வரன் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை !
சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது. விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் நிலையில், ஈஸ்வரன் திரைப்படம் வெளியானால் சற்று வசூல் குறைவாக தான் இருக்கும் என பல விமர்சனங்கள் எழுந்து வந்தாலும்,சிம்பு ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை.
இந்த படத்தில் நாயகிகளாக நிதி அகர்வால் மற்றும் நந்திதா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் தளர்த்தப்பட்ட நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக 28 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து கதையை தழுவி அமைந்திருக்கும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களும், சிலர் படம் சற்று போர் அடிப்பதாகவும் கூறி கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஈஸ்வரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.20 லட்சம் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.