Connect with us
 

News

எனது நீண்ட தூக்கம் கலைந்தது சமந்தாவின் திடீர் பதிவு !

Published

on

சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்திக்கு கண்டிப்பாக இதற்க்கு எதும் பதில் கொடுப்பார் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது ஆமாம் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தள பக்கமே வராமால் இருந்தார் சமந்தா.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் தற்போது அவரது செல்ல நாயுடன் சமூக வலைத்தள பக்கத்தில் தூங்கும் ஒரு புகைப்படதை பகிர்ந்து எனது நீண்ட தூக்கத்தில் இருந்து மீண்டும் வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த மார்ச் 28-ம் தேதிக்கு பின்னர் இந்த பதிவை பதிவு செய்துள்ளார். இப்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்காதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் படப்பிடிப்பு கொரோனா விடுமுறைக்கு பின்னர் மீண்டும் தொடங்கும்.