Connect with us
 

News

என் வாழ்நாள் கனவு நிறைவேறியது – நடிகர் சாந்தனு

Published

on

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் .

இந்தப் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர் .

தற்போது தளபதி விஜயின் தீவிர ரசிகரும் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தளபதி 64 படத்தில் நடிக்கிறார். தளபதி விஜய் அவர்களின் ஒவ்வொரு படத்திற்கும் வரும் அறிவிப்புகளை மகிச்சியுடனும் , உற்சாகத்துடனும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .