News
எம்.ஜி.ஆர்.பட தலைப்பில் தனுஷ்?


பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஒரு கேங்க்ஸ்டராக நடித்து வருவதாக படத்தின் மிரட்தள் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மொ நடித்து வருகிறார்.தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
இந்த படத்தில் தனுஷ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை சுற்று வருவாராம் அதனால் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்று பெயர் வைக்கலாமா என்று வைக்கலாமா என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆலோசனை செய்து வருகிறார். இருந்தாலும் இன்னும் படத்தின் பெயர் இன்று வரையில் உறுதி படுத்தவில்லை.
ய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.