Connect with us
 

News

எல்லோரையும் கவரும் கமர்ஷியலாக இப்படம் இருக்கும் படத்தில் காமெடி இருக்கும் அதே நேரம் செண்டிமெண்டும் இருக்கும்.

Published

on

ஶ்ரீ கோகுலம் என்பது பன்னெடுங்காலமாக பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வரும் ஒரு பெரு நிறுவனம் ஆகும். மலையாளத்தில் பல படங்களை தயாரித்து வெற்றி பெற்றுள்ள அந்நிறுவனம் அடுத்த படியாக தமிழில் கால் பதிக்கிறது.

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் முதல்முறையாக தமிழில் தயாரித்துள்ள படம் “தனுசு ராசி நேயர்களே”. புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள“தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை
போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் தன் ராசிக்கேற்ற நாயகியை தேடி அலைகிறார் அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு இன்று கோலகமாக நடைபெற்றது.
விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

விழாவில் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் பேசியதவது…

தமிழ் சினிமாவில் முதல் முறையாக நாங்கள் எடுத்திருக்கும் படம் இது. மலையாளத்தில் நாங்கள் நிறைய படம் எடுத்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நல்ல கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். தமிழத்தில் அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன். தமிழ் எனக்கு பிடித்த மொழி. இப்படத்தில் என் மகள் ஒரு பாடல் பாடியுள்ளார். இங்கு படம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி என்றார்.

சத்யஜோதி தியாகராஜன் பேசியது..

கோபலன் அவர்களின் பயணம் பெரியது. சின்ன சின்னதாக ஆரம்பித்து பெரிய இடத்தை அடைந்தவர். மலையாளத்தில் நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். தமிழில் நல்ல இயக்குநருடன் படம் செய்கிறார். இயக்குனரை சின்ன வயதிலிருந்தே தெரியும். இசையமைப்பாளர் ஜிப்ரான் வளர்ச்சி மிகப்பிரமாதமா இருக்கிறது. இப்படத்திற்கு அவரது பாடல்கள் பலம். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியது….

இப்படத்தின் இயக்குநரை கமல் சாருடன் வேலை செய்யும் காலத்தில் இருந்தே தெரியும். துறுதுறுவென உற்சாகமாக சுற்றும் ஆள். முன்பே என் படத்திற்கு நீங்கள் தான் இசை
என்று சொல்லிவிட்டார். கமல் சார் படம் மாதிரி இல்லாமல் கமர்ஷியல் படம் போல் இசையமைத்து தர வேண்டும் என்று கேட்டார். அவருக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பார். மனதுக்கு நெகிழ்வான திரைப்படங்களை நாம் மிஸ் செய்கிறோம். இந்தப்படம் அதை நிவர்த்தி செய்யும். எல்லாமே திட்டமிட்டபடி செய்வதில் தயாரிப்பு நிறுவனம் வல்லவர்களாக இருக்கிறார்கள். இந்தப்படம் எல்லோரையும் மகிழ்விக்கும்படி இருக்கும் என்றார்.

இயக்குநர் சந்தான பாரதி பேசியதாவது …

தயாரிப்பாளர் இப்படத்தை மிகப்பெரிய செலவில் எடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி. நாயகிகள் இருவரும் அழகாக இருக்கிறார்கள். நாயகன் நன்றாக நடித்துள்ளார். படம் நான் பார்த்துவிட்டேன் நன்றாக இருக்கிறது. எங்களின் வீட்டில் மூன்றாம் தலைமுறை சினிமாவுக்கு வந்துள்ளது எல்லோரும் ஆதரவளியுங்கள். நன்றி என்றார்.

நாயகி டிகங்கனா சூர்யவன்சி பேசியது

இயக்குநர் சஞ்சய் பாரதிக்கு தான் முதல் நன்றி. என்னை நம்பி இந்தக்கேரக்டரை தந்தார். மொழி தெரியாவிட்டாலும் மிகப்பொறுமையாக எனக்கு எல்லாம் சொல்லி தந்தார். ஹரீஷ் மிகச்சிறந்த நடிகர். நான் நடிக்க நிறைய உதவி செய்தார். மொத்த படக்குழுவுக்கும் என் மீது அன்பு காட்டியதற்கு நன்றி. ஜிப்ரானின் பாடல்கள் அட்டகாசமாக வந்துள்ளது. கதை கேட்கும்போதே சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களையும் இப்படம் புன்னகைக்க வைக்கும். என்னை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

நாயகன் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…

கோகுலம் மிகப்பெரிய நிறுவனம் அவர்களது முதல் தமிழ் தயாரிப்பில் நடிப்பதில் பெருமை. சஞ்சய்க்கு நன்றியெல்லாம் சொல்ல முடியாது. அவருடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு கதை இருக்கென்று சொல்லி என்னை மறக்காமல் இப்படத்தில் இணைத்தற்கு நன்றி. இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
ஜிப்ரான் எல்லாத் திறமைகளும் தன்னுள்ளேயே கொண்டவர். எந்த மாதிரியான படத்திற்கும் எளிமையாக இசையமைத்துவிடுவதில் வல்லவர். இப்படத்தில் இசை எல்லோரையும் மயக்கும். எல்லோரையும் கவரும் கமர்ஷியலாக இப்படம் இருக்கும் படத்தில் காமெடி இருக்கும் அதே நேரம் செண்டிமெண்டும் இருக்கும். நல்ல படம் என மக்கள் சொல்லும்படி இருக்கும். பிக்பாஸுக்கு பின் எனக்கு மக்களிடம் ஒரு நல்ல இடம் கிடைத்துள்ளது. அதை வீணடிக்க மாட்டேன். எல்லோருக்கும் பிடிக்கும்படி படம் செய்வேன் என்றார்.

கலைப்புலி தாணு பேசியதாவது…

எனது நண்பர் சந்தான பாரதி அவரது மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் இது. ஹரீஷ் கல்யாணின் அப்பா கல்யாண் என்னுடன் விநியோகதஸ்தராக சினிமாவில் அறிமுகமானவர். நாயகி எனது “ஹிப்பி” தெலுங்கு படத்தில் நடித்தவர். இவர்கள் இணைந்திருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த வருஷம் தனுசு எனும் பெயருக்கு வெற்றி தரும் காலம். அசுரன் படம் போல் இப்படமும் வெற்றி பெறும். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் சஞ்சய் பாரதி பேசியதாவது….
இந்தக்கதையை கேட்டுவிட்டு ஒரு மிகப்பெரும் நிறுவனத்தில் புதுமுகமான எனக்கி வாய்ப்பு தந்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் நான் கமிட்டானவுடனே ஜிப்ரானிடம் தான் போனேன். நான் படம் செய்தால் அவர் தான் இசை என்று முன்பே முடிவு செய்திருந்தேன். அட்டகாசமான இசையை தந்திருக்கிறார். வசனங்களில் எனக்கு பேருதவியாக இருந்த பொன் பார்த்திபனுக்கு நன்றி. எனது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி.

நாயகன் ஹரீஷ் கல்யாண் ஜிப்ரானுக்கு பிறகு அவரிடம் தான் சென்றேன். என்னை நிறைய பேர் நமபவில்லை ஆனால் என்னை முழுமையாக நம்பி வந்தார். நன்றாக செய்திருக்கிறார். ஹீரோயின் கச்சிதமாக நடிக்கும் நடிகை. ப்ராம்ப்ட் இல்லாமல் நடிக்கும் நடிகை. அவருக்கு வாழ்த்துக்கள். உங்கள் எல்லோரையும் இந்த படம் கவரும் நம்புகிறேன் நன்றி என்றார்.

Continue Reading