News
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் இணையும் யோகி பாபு !

ஜோ பேபி இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்.
இந்நிலையில் இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் ஐஸ்வர்யாக்கு ஜோடியாக பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் யோகிபாபு இணைந்துள்ளார்.