News
ஒடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியாவது தளபதிக்கு உடன்பாடு இல்லை !
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக காத்திருக்கும் ‘மாஸ்டர்’ கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பட வெளியீடு பல முறை ஒத்தி வைப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது தற்போது கிடைத்த தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கள் திருநாளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் கொரோனா காரணமாக திரையரங்கில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்க முடியாத நிலை என்பதால் தயாரிப்பாளர்கள் கேட்கும் விலையில் திரையரங்க உரிமையாளர்கள் பேரம் பேசி வருகிறார்கள்.
படத்தை ஓடிடிக்கு விற்கலாம் என்றாலும் திரையரங்கில் படம் வெளியாக வேண்டும் என விஜய் உறுதியாக இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பில் தொடர் பேச்சு வார்த்தை நடத்த்ப்பட்டு வருகிறது. இதனால் பொங்களுக்கு படம் திரையரங்கில் வெளியாவதிலும் தாமதம் ஏற்ப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.