News
ஒத்த செருப்பு படத்திற்க்காக பார்த்தீபனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் – ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் ஒத்த செருப்பு இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் பார்த்திபனை தவிர வேறு யாரும் நடிக்கவில்லை என்பது முக்கியமான தகவல். இது போன்ற ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்த படங்கள் மிக மிக குறைவு. இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர்,பாக்கியராஜ், கே.எஸ்.ரவிகுமார் நடிகர் கமல்ஹாசன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அழைப்பு கொடுத்து இருந்தார் பார்த்திபன் தற்போது தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி இந்த விழாவிற்கு வர முடியாமல் போனது அதனால் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார் அதில் கூறியதாவது.
பார்த்திபன் ஒரு வித்தியாசமான இயக்குனர் அவர் மேலும் பல படங்களை இயக்க வேண்டும் இந்த படத்தை பற்றி கூற வேண்டும் என்றால் ஒத்த செருப்பு படம் அதாவது தனி ஒரு நபர் படம் முழுவதும் வருது தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சியாக இருக்கும்.
1960-ஆம் ஆண்டுகளில் யாதீன் என்ற ஒரு படத்தை சுனில் தத் அவர்கள் எடுத்தார்கள். அந்த படமும் இது போன்றுதான் அவரை தவிர வீறு யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதன் பிறகு பார்த்திபன் இந்த முயற்சியை எடுத்திருக்கிறார். இரண்டாவது முறையாக தென்னிந்திய சினிமாவில் இந்த முயற்சியை பார்த்திபன் எடுத்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் இந்த படத்திற்கு கதை,வசனம், இயக்கி தயாரித்து நடித்துள்ளார். இது சினிமா உலகில் முதல் முறையாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். இந்த படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு அதில் வெற்றி பெற வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.