News
ஒரே வருடத்தில் 3 படங்களில் சிவகார்த்திகேயன் !

லாக்டவுனுக்கு பிறகு அடுத்த 3 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இப்போது நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ ரவிக்குமார் இயக்கும் ‘அயலான்’ படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். இதில் ஒரு படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் துல்கர் சல்மான் – ரிது வர்மா நடித்த ‘கண்ண்ம் கண்ணும் கொல்லையடித்தால்’ படத்தை இயக்கியவர். சமீபத்தில் ஒரு கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லியிருக்கிறார். அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதையடுத்து திரைக்கதை எழுதும் பணியில் தேசிங்கு பெரியசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அட்லியின் உதவியாளர்கள் இரண்டு பேர் தனித்தனியே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லியுள்ளனர். இந்த இரண்டு கதைகளுமே பிடித்துவிட்டதால் இதில் நடிக்க அவர் ஓகே சொல்லி விட்டாராம். அடுத்த ஆண்டுக்குள் இந்த 3 படங்களையும் முடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார்.