Connect with us
 

News

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய மோகன்லால் !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படம் கர்ணன்.

இந்நிலையில் இந்த படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையை மோகன்லால் பெற்றுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் – மஞ்சு வாரியர் நடித்த அசுரன் திரைப்படதின் கேரல உரிமையை மோகன்லால் பெற்று இருந்தார் அப்படத்தின் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படத்தை மோகன்லால் வாங்க காரணம் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்து இருந்தார் அந்த நம்பிக்கையில் துணிந்து அசுரன் படத்தை மோகன்லால் வாங்கினார். அதே போல கர்ணன் படத்தில் நாயகி ரஜிஷா வியனும் வில்லன் லாலும் கேரளாவில் பிலபலம் என்பதால் கர்ணன் படத்தையும் மோகன்லால் துணிந்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை மோகன்லால் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.