Connect with us
 

News

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைகிறார்கள் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளனர்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

ஆதித்யா வர்மா படத்தில் நடித்த துருவ் அடுத்த படத்தில் நடிக்க கதைகள் கேட்டு வந்தார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை பிடித்திருந்ததால் அவரது இயத்தில் விக்ரம் துருவ் இணைந்து நடிக்க சம்மதித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பீட்சா,ஜிகர்தண்டா,இறைவி,பேட்ட படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை அடுத்து விக்ரம் படத்தை இயக்க உள்ளார் இன்னும் இந்த படத்துக்கு பெயர் வைக்கவில்லை.

கோப்ரா , துக்ளக்,தர்பார்,காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.