News
கார்த்திக் நரேன் – தனுஷ் படத்தில் இணையும் மாஸ்டர் நாயகி?

தனுஷ் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் இணையும் படமான தனுஷின் D 43 படதில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் தனுஷின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனன் உங்களுடன் பணிபுரிய மிகவும் ஆவலாக இருக்கிறேன் நம் இருவரையும் விரைவில் யாரவது ஒரே படத்தில் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன் எனகு பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலளித்த தனுஷ் நானும் மிகவும் ஆவலாக இருக்க்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது கார்த்திக் நரேன் நடிக்கும் படத்துக்கு நாயகி தேடும் படலத்தில் இருக்க அந்த வாய்ப்பு மாளவிகா மோகனுக்கு சென்றிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருப்பது குறிப்படத்தக்கது அதற்கு காரணம் இவர் தளபதி விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் மட்டும்தான் என்பதும் குறிப்புடத்தக்கது !