News
மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் !

கார்த்தி நடிப்பில் 2019 வெளியான தேவ்,கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்த அதில் குறிப்பாக கைதி சாதனை படைத்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு எந்த படங்களும் இல்லை.
கடந்த ஏப்ரல் மாதம் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் திரைக்கு வந்த வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது தாக்கம் காரணமாக பொன்னிய்ன் செல்வன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது படக்குழு.
இந்நிலையில் கார்த்தி அடுத்த படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். லட்சுமன்குமார் தயாரிக்க பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு வேடத்தில் வயதானவர் போல வித்தியாசமான தோற்றதில் வருகிரார்.சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் இதற்கு முன்னர் கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் நடித்த இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ ஆகிய படங்களாஇ இயக்கியவர் பி.எஸ்.மித்ரன்.
இப்படத்தில் ஆர்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.சிம்ரன்,சங்கி பாண்டே, ரஜிஷா விஜயன் என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.