Connect with us
 

News

90 சதவீதம் உறுதியான தளபதி 65 படத்தின் இயக்குநர்

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அடுத்த படமான தளபதி 65 படத்தை பிரபள தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

ஆனால் தளபதி 65 படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல் மட்டும் இன்று வரையில் அறிவிக்க படாமலே இருக்கிறது. பலர் ஏ.ஆர்.முருகாதாஸ் தளபதி 65 படத்தின் இயக்குநர் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குநர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய குடும்ப திரைப்படங்களை இயக்கி கடந்த சில வருடங்களாக பேமிலி ஆடியன்ஸை தன் திரைப்படங்களுக்கு இழுத்து வரும் பாண்டிராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் என சொல்லப்படுகிறது.