Connect with us
 

News

பிக்பாஸ் புகழ் கேபிரில்லாவுக்கும் கொரோனா தொற்று உறுதி !

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை கேபிரில்லா. அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்தார். கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கேபிரில்லா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது: தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன் தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.