Connect with us
 

News

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

Published

on

நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் தமிழக தேர்தல் முடிவடைந்த பின்னர் வெளியாகிறது. அதை தொடர்ந்து அயலான் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கம்ப்பூட்டர் கிராபிக்ஸ் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து புது முக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி இயக்குனர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக வழக்கமான மசாலக்கள் இல்லாமல் வித்தியாசமான கதையாக உருவாக்கி இருக்கும் கே.வி.ஆனந்த் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறாராம்.