Connect with us
 

News

கையை விரித்த லைக்கா நிறுவனம் இந்தியன் 2 நிலை?

Published

on


2.0 படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கம் படம் இந்தியன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படம் திட்டமிட்டபடி சரியாக நடக்கவில்லை என்றும் முதல் கட்ட படப்பிடிப்பே சொன்ன பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த இந்தியன் 2 படத்தை தொட லைகா நிறுவனம் விரும்பவில்லை.

சுமார் ரூ.350 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தை தயாரிக்க இருந்தது லைகா நிறுவனம் ஆனால் இன்று வரையில் முதல் கட்ட படப்பிடிப்பே முடியாததால் லைகா நிறுவனம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கமல் தற்போது பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக உள்ளார். இதனால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போகிறது இதனால் இந்த படத்திலிருந்து ஒதுங்கலாம் என்று லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.

இதனால் சங்கர் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தேடுகிறார் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் அவர்களோ படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே தயாரிப்பதை பற்றி யோசிப்போம் என்று கூற தற்போது ஷங்கர் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். ஒரு வேலை இந்த நிறுவனனமும் இல்லை என்று கூறினால் இந்தியன் 2 படமும் கைவிடப்படும் என்று சினிமா வட்டாரம் கூறுகிறது.

Continue Reading