News
கோப்ரா திரைப்படம் ஒடிடி-யில் ரிலீஸ் தகவல் பொய்யானது என்று அறிவித்த தயாரிப்பு நிறுவனம் !

டிமாண்ட்டி காலனி, மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்த்ய் இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படி இருக்க இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கிருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான தகவல் இதில் எந்த விதமான உண்மையும் இல்லை என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.