Connect with us
 

News

சஞ்சய் விஜய் நடிக்க வருவது பற்றி அவர்களே கூறிய தகவல் !

Published

on

தன் நடிப்பால் பல லட்சம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒருவர் அப்படி இருந்தாலும் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் முதல் முறையாக வெறித்தனமான வில்லன் நடிப்பில் மிரட்டிய படம் விக்ரம் வேதா,அதன் பின்னர் பேட்ட தற்போது மாஸ்டர் படம் என தொடர்ந்து கொண்டே போகிறது. தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் ஜூன் 22-ம் தேதி வெளியாகயுள்ளது. தற்போது விஜய்சேதுபதி விஜய் சேதுபதி தெலுங்கில் “உப்பெண்ணா” என்ற படத்தில் panja vaishnav tej ற்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் தமிழ் உரிமத்தை விஜய்சேதுபதி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் இப்படத்தின் ஹீரோவாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது.

விஜய் மகன் ஹீரோவாக களமிறங்க விஜய் சேதுபதி வில்லனா வாவ் வெறித்தனம் வெயிட்டிங் என விஜய் ரசிகர்கள் சிலிர்ப்படைந்து விட்டனர். பின்னர் இது உண்மை தானா என நெருங்கிய தரப்பில் விசாரித்தபோது இது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.

மேலும் சஞ்சய் டங்களில் நடிப்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என விஜய் தரப்பு விளக்கம் கொடுத்தது.