Connect with us
 

News

சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம் !

Published

on

தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. தற்போது பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் அழகிய கண்ணே படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நட்ந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100-க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை தவிர்த்து படத்தின் படப்பிடிப்பை பார்க்க பலர் கூடியிருந்தனர். இது அறிந்து கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.

குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டு படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிச் சென்றனர்.

Continue Reading