Connect with us
 

News

சாதனை மேல் சாதனை படைத்து வரும் தளபதியின் பீஸ்ட் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். ஏப்ரம் 13-ம் தேதி திரையரங்குகளில் 5 மொழிகளில் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம்.

இந்த நிலையில்தான் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் கலந்த டிரைலரை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சென்னையிலுள்ள ஒரு மிகப்பெரிய ஷாப்பிங்கை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்கிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் உலகின் திறமைமிக்க ஒரு உளவாளியான விஜய் அங்குள்ள தீவிரவாதிகளை கொலை செய்து எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பதை அந்த டிரைலரில் அதிரடியாகவும் அனிருத் பின்னணி இசையிலும் சும்ம மிரட்டலாக வெளியிட்டது.

பீஸ்ட் டிரைலர் வெளியாகி 6 மணி நேரத்திலேயே 1 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களும் 2 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்தது.