News
சினிமா, இசை, நடனத்துக்கும் அப்பாற்பட்ட விஷயத்தை சொல்லும் லக்ஷ்மி – தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா

ரசிகர்கள் மட்டுமல்லாது தயாரிப்பாளர்களும் இயக்குனர் விஜய் தன் படங்களில் செய்யும் அழகியல் சார்ந்த விஷயங்களை பார்த்து பாராட்டுகிறார்கள். அவரது திரைப்படங்கள் எந்த ஜானராக இருந்தாலும் அப்பால் சென்று உலகளாவிய பார்வையாளர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை வலுவாக வெளிப்படுத்துகிறது. “விஜய் சாரிடம் நான் தனிப்பட்ட முறையில் பார்த்து ரசிக்கும் விஷயம், அவரது திரைப்படங்களில் உள்ள எமோஷனல் விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த தவறியதில்லை. அதுவே அவரது வெற்றிக்கு பின்னால் ஒரு வலுவான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்டை படித்தவுடன் நானே இதனை உணர்ந்தேன். கதையின் வலிமையான விஷயமாக நான் நம்பும், கதையில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு சிறிய உணர்வுகளையும் ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. லக்ஷ்மி திரைப்படம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தாண்டி சில விஷயங்களை வெளிப்படுத்தும்” என்கிறார் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திரன் ஆகியோருடன் இணைந்து இந்த சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் லக்ஷ்மி படத்தை தயாரித்துள்ள ஸ்ருதி நல்லப்பா.
நடனப்புயல் பிரபுதேவா பற்றி அவர் கூறும்போது, “அவரைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது? உலகமே அவரை அறிந்திருக்கிறது. எவ்வளவோ பாராட்டுகள், பட்டங்களை தாண்டி பிரபுதேவா ஒரு நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் மற்றவர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் மற்றும் ஒரு தயாரிப்பாளர் நலனில் அக்கறை செலுத்தும் குணம் எப்போதும் என் நினைவில் இருக்கும்” என்றார்.
படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பார்கள். குறிப்பாக, பேபி தித்யா பாண்டே பற்றி அவர் கூறும்போது, “லக்ஷ்மி படத்தில் ரசிகர்களை நிச்சயம் கொள்ளை கொள்வார். படம் பார்த்து முடித்த பின்னர் பார்வையாளர் மனதில் தங்கி, அவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்லாமல், அவர்கள் வாழ்வில் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பார்” என்றார்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் லக்ஷ்மி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
பிரபுதேவா, தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா, சல்மான் யூசுப் கான், சாம்ஸ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கும் இந்த நடனம் சார்ந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகிறது. சாம் சிஎஸ்சின் துள்ளலான இசையில் உருவாகியிருக்கும் லக்ஷ்மி படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவும், ஆண்டனி எடிட்டிங்கும் செய்திருக்கிறார்கள்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடனான தொழில்முறை தொடர்புகளை நினைவுகூறும் ஸ்ருதி நல்லப்பா, “நாங்கள் முதல் முறையாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து பணிபுரிகிறோம். எங்கள் முதல் தமிழ் படத்திலேயே அவர்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருடைய மார்க்கெட்டிங் திறமைகள் லக்ஷ்மியை நல்ல இடத்துக்கு எடுத்து சென்று ஒரு வெற்றிகரமான படமாக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.