News
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துக்கு யூ/ஏ சான்றிதல் !

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் நிறுவனத்துடன் சேர்ந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது. சென்சாரில் டாக்டர் படத்திற்கு யூ/ஏ சான்றிதல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சிவகார்த்திகேயனின் அனைத்து படங்களுமே யூ சான்றுதல் கிடைத்து வந்தது.
இந்த படம்தான் முதல் முறையாக யூ/ஏ சான்றிதல் பெற்று யூ சான்றிதலை முதல் முறையாக தவற விட்டுள்ளார்.