News
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அனிருத் ஹீரோ?
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 , விஜய்சேதுபதி,நயன்தாரா ,சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல். சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் ,விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் என இசை அமைப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார் அனிருத்.
இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இது பற்றி அனிருத்திடம் கேட்டபோது தனக்கு சினிமாவில் நடிக்கை ஆசை இல்லை என்றும், தனி இசை ஆல்பத்தில் மட்டுமே நடிக்க ஆசை என்றும் சொன்னார். சமீபத்தில் அவர் சமூக வலைத்தளத்தில் தனது போட்டோவை வெளியிட்டார்.
உடனே சிவகார்த்திகேயன் சார் எப்போது என்றாலும் சரி நீங்கள் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர் என்று கமென்ட் செய்தார். இதற்க்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்க இப்போதே உங்களிடம் நான் வாய்ப்பு மனதில் ஆழமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என்று சிவார்த்திகேயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.