Connect with us
 

News

சீமராவின் வீரமான இசை மதுரை மண்ணில் வெளியீடு

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் சீமராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் பாடல் மாற்று டீசர் வெளியீட்டு தேதி குறித்து அதிகார்வபூர்வ தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM வெளியிட்டுள்ளது.

டி.இமானின் மயக்கும் இசையில் யுகபாரதியின் மனதை கவரும் வரிகளில் உருவாகியுள்ள பாடல்கள் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வீரம் விழைந்த மதுரை மண்ணில் மிக பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதற்கு முன்னர் இம்மாதம் 25ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் பாடலான வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடல் வெளியாகவுள்ளது.

வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது