News
சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்?

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சீயான் 60 திரைப்படம் உருவாகருக்கிறது. இப்படத்தில் முதல் முறையாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக உள்ளது. இதற்கு முன் வாணி போஜன் ஓ மை கடவுளே, லாக்கப் படங்களில் நடித்துள்ளார்.
அடுத்து ராதா மோகன் இயக்கும் படம் இப்படத்தை சூர்யா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கவுள்ளார் வாணி போஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.