News
சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சீயான் விக்ரம் நடிக்கும் 58வது படம்தான் கோப்ரா இப்படத்தை இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதங்களாக விறு விறுப்புடன் நடந்து வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடைந்து விடும் அதன் பின்னரே மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க செல்ல திட்டமிட்டுள்ளார் சிக்ரம்.
இந்நிலையில் இப்ப்டத்தின் இயக்குநர் அஜய்ஞானமுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதாவது இப்படத்தின் பர்ட்ஸ் லுக் வரும் வெள்ளிகிழமை அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கதில் அதிகார்வபூர்வமாக அறிவித்தார். அது மட்டுமில்லாமல் இது குறித்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தில் வெளியாக இருந்தது ஆனால் அது ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது