Connect with us
 

News

சுதந்திர தேவியாக சமந்தா நடிக்கும் சீமராஜா

Published

on

சமந்தா நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் இரும்புத்திரை அதில் டாக்டர் ரதிதேவி என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இனைந்து நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இந்த படத்தில் சுதந்திரதேவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இதுவரை எந்த நடிகையும் நடிக்காத சிலம்பாட்ட மாஸ்டராக நடித்துள்ளார் சமந்தா. இந்த கேரக்டர் மிக இயல்பாக திரையில் தெரிய வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் சிலம்பம் பயிற்சி எடுத்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை என வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் சமந்தாவுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு சிறப்பான தினம் ஆகும். இந்த நாளில்தான் அவர் நடித்த ‘சீமராஜா’ மற்றும் ‘யுடர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.