Connect with us
 

News

சுதா கொங்காரா படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொள்ள விஜய் போட்ட கட்டளை !

Published

on

பெரிய நடிகர்கள் படங்கள் நடித்து முடித்ததும் பல இயக்குநர்கள் எப்படியாவது அவர்களின் அடித்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து கதைகளை தயார் செய்து விட்டு அவர்களிடம் கதை சொல்வது வழக்கம்.

ஆனால் அந்த நடிகர் எந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பத்தம் செய்கிறார் என்பதே மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் போதே அட்லீ, பாண்டிராஜ், சுதா கொங்கரா, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட நான்கு இயக்குனர்களின் கதையை
கேட்டாராம்.

விஜய் அவர்களின் வழக்கம் என்போதும் ஒரு இயக்குநரிடம் கதை கேட்டு விட்டு உடனே ஓகே சொல்லிவிட மாட்டாராம் குறைந்தது ஒரு மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டு அதில் சிறந்த கதை எது என்று முடிவு எடுத்து பின்புதான் நடிக்க முடிவு செய்வாராம்.

இந்த வருசையில் தளபதி 65 படத்தில் நடிக்க விஜய் சுதா கொங்கரா, பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட மூவரின் கதை தேர்வு செய்த விஜய் முதலில் சுதா கொங்கரா படத்தில் நடிக்க ஓகே சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுவும் அவ்வளாவு எளிதாக ஒப்பத்தம் செய்யவில்லையாம் தற்போது சுதா கொங்காரா சூர்யா வைத்து இயக்கியுள்ளா ‘சூரரை போற்று’ படத்தை தனக்கு திரையிட்டு காட்டும்படி கேட்டுக்கொண்டாராம் அதன் பின்னரே இவர் படத்தில் நடிக்க விஜய் ஒப்புதல் தெரிவித்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.