News
சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் – பவன் கல்யாண்

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத் தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார்.
அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜி யின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.