News
சூரரை போற்று படத்தின் இசை வெளியீட்டு விழா இங்குதான் நடைபெற போகிறது !

சூரியாவின் 38 வது படமான சூரரை போற்று பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூரியா நடிப்பில் , இறுதி சுற்று டைரக்டர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகின்றன .
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் புரொமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தற்போது வரும் 13 ஆம் தேதி சூரரை போற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்த படம் என்பதால் , இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை விமான நிலையத்தில் நடத்த படகுழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் படக்குழுவினர் அனுமதி பெற்று உள்ளனர்.
முதன்முதலாக திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறுகிறது . இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்து இருக்கிறார். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்,தெலுங்கு பட திரை உலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
By : Saranya
Follow @Saran55288794