Connect with us
 

News

அண்ணா நலமுடன் இருக்கிறார் இன்று வீடு திரும்பினார் கார்த்தி டுவிட் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களுல் சூர்யா-வும் ஒருவர் சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பலரும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் அண்ணன் நலமுடன் வீடு திரும்பினார் இன்னும் சில தினங்களுக்கு அண்ணா தனிமைப்படுத்தலில்தான் இருப்பார்.

அவரின் நலனுக்காக கடவுளை வேண்டிக்கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் சொல்லிவிட முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading