News
சூர்யா படத்திலிருந்து விலகிய அல்லுசிரிஷ் காரணம் என்ன?

சூர்யா தற்போது நடித்து வரும் தனது 37-வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கயிருந்தார் அல்லுசிரிஷ். இதன் படப்பிடிப்பும் சமீபத்தில் லண்டனில் நடைப்பெற்றது.
இந்நிலையில் இதில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த தெலுங்கு நடிகரும் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லுசிரிஷ் இந்த படத்தில் இருந்து நான் விலகி கொள்கிறேன் என்று அவரது சமூக வளைத்தளத்தில் உறுதியாக கூறியுள்ளார்.
சூர்யா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேதிகளை நான் நடிக்கும் மற்ருமொரு படத்தின் படப்பிடிப்பு தேதிகள் ஒரே நேரத்தில் வருவதால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது இத மிகவும் வலியுடன் இந்த செய்தியை நான் பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த படத்தில் இவருக்கு பதிலாக இன்னொரு நடிகரை தேடும் பணியில் படக்குழு உள்ளது. இதே படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி ஆகிய பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சூர்யாவுக்கு 37 படமாகும்.